அக்டோபர் 16, அமீரகம் (Cricket News): துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை டி20 2024 (2024 ICC Women's T20 World Cup) போட்டிகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் மோதிக் கொள்கின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அதன்படி நேற்றிரவு நடந்த பி பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும், இங்கிலாந்தும் (England v West Indies) விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. CM Trophy 2024: முதலமைச்சர் கோப்பை 2024; நேற்று நடைபெற்ற போட்டிகளின் பதக்கப் பட்டியல் வெளியீடு..!
தொடர்ந்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீசும், தென்ஆப்பிரிக்காவும் முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.