AUS Vs SA 1st ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 19) கெய்ர்ன்ஸில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

AUS Vs SA 1st ODI (Photo Credit: @tajal_noor X)

ஆகஸ்ட் 18, கெய்ர்ன்ஸ் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா (AUS Vs SA) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 19) காலை இந்திய நேரப்படி 10 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். AUS Vs SA 3rd T20I: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (Australia Vs South Africa):

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. டி20 தொடரை இழந்ததற்கு, தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 110 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா அணி 51 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 55 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கேமரூன் கிரீன், மார்னஸ் லாபுசேன், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா, நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன், அலெக்ஸ் கேரி, சேவியர் பார்ட்லெட்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

டெம்பா பவுமா (கேப்டன்), ரியான் ரிகெல்டன், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஐடன் மார்க்ரம், டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், கேஷவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, நந்த்ரே பர்கர், மேத்யூ பிரீட்ஸ்கே, செனுரான் முத்துசாமி, டோனி டி சோர்சி, கார்பின் போஷ், பிரெனலன் சுப்ரயன், க்வேனா மபாகா.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement