AUS Vs SA 3rd T20I (Photo Credit: @JeetbuzzNews X)

ஆகஸ்ட் 14, கெய்ர்ன்ஸ் (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 1-1 என தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா (AUS Vs SA) அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 16) கெய்ர்ன்ஸில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:45 மணிக்குத் தொடங்கும். WI Vs PAK 3rd ODI: கேப்டன் ஷாய் ஹோப் அபார சதம்.. பாகிஸ்தான் வெற்றி பெற 295 ரன்கள் இலக்கு..!

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (Australia Vs South Africa):

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால், இப்போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 டி20ஐ போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலிய அணி 18 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், மிட்செல் ஓவன், க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், மேத்யூ ஷார்ட், சீன் அபோட், ஆரோன் ஹார்டி, மேத்யூ குஹ்னேமன்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிக்கல்டன், லுவான்ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், செனுரான் முத்துசாமி, ககிசோ ரபாடா, க்வேனா மபாகா, லுங்கி நிகிடி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ப்ரீனெலன் சுப்ரயன், நந்த்ரே பர்கர், நகாபயோம்சி பீட்டர்.