ZIM Vs SL 1st ODI: ஜிம்பாப்வே - இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
ஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 29) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 28, ஹராரே (Sports News): இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜிம்பாப்வே - இலங்கை (ZIM Vs SL) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 29) இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு ஆரம்பமாகிறது. AFG Vs PAK: யுஏஇ முத்தரப்பு டி20 தொடர்; தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாளை மோதல்..!
ஜிம்பாப்வே எதிர் இலங்கை (Zimbabwe Vs Sri Lanka):
கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் இதுவரை 64 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஜிம்பாப்வே அணி 12 போட்டிகளிலும், இலங்கை அணி 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம்.
ஜிம்பாப்வே அணி வீரர்கள்:
பென் குர்ரன், பிரையன் பென்னட், கிரெய்க் எர்வின் (கேப்டன்), பிரெண்டன் டெய்லர், சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, பிராட் எவன்ஸ், டோனி முனியோங்கா, ஜோனாதன் காம்ப்பெல், ரிச்சர்ட் ங்கராவா, பிளசிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு, நியூமன் நியாம்ஹுரி, எர்னஸ்ட் மசுகு.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிசங்கா, நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லலகே, மஹேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க, ஜெப்ரி வான்டர்சே.
(The above story first appeared on LatestLY on Aug 28, 2025 11:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

