ஆகஸ்ட் 28, ஷார்ஜா (Sports News): ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணி யுஏஇ அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடர் நாளை (ஆகஸ்ட் 29) முதல் தொடங்கி செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில், முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிபோட்டியில் (செப்டம்பர் 07) மோதும். அனைத்து போட்டிகளும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும். Breaking: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தமிழக வீரர் அஸ்வின்.. ரசிகர்கள் சோகம்.!
ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (Afghanistan Vs Pakistan):
இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 29) நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் (AFG Vs PAK) அணிகள் மோதுகின்றன. ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மதுல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பதின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசன்ஃபர், நூர் அகமது, பரித் மாலிக், அப்துல்லா அஹ்மத்ஸாய், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
ஃபகார் ஜமான், ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), ஃபஹீம் அஷ்ரஃப், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது நவாஸ், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, முகமது வாசிம், சல்மான் மிர்சா, ஷஹீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம்.