ஜூலை 13, ஹராரே (Sports News): ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட (India Tour Of Zimbabwe 2024) இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் 3 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-1 என்ற முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, இன்று மாலை தொடங்கிய 4-வது போட்டி (ZIM Vs IND) ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. Ambulance Collides With Lorry: லாரி-ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி..! 2 பேர் படுகாயம்..!
முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தனர். பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த நிலையில், அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா மட்டும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் அடித்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் அடித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 15.2 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். ஜெய்ஸ்வால் 93 ரன்களும், கில் 58 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
WHAT A INCREDIBLE KNOCK BY YASHASVI JAISWAL..!!!! ⭐
He smashed Unbeaten 93* runs from 53 balls including 13 fours and 2 sixes against Zimbabwe in this run chase - The future superstar of World Cricket.#yashasvijaiswal𓃵 #INdvzim #indvszim #zimvsind #zimvind #CricketTwitter https://t.co/TLYDjb9Ico
— cinema 🎥 (@ccrricckkeetttt) July 13, 2024