ஜூலை 13, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மெடினிபூர் மாவட்டத்தில், அபர்ணா என்ற நோயாளியை கிர்பாயில் உள்ள மருத்துவமனையில் இருந்து மெடினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் அவரது உறவினர்கள் கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது, சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மீது ஆம்புலன்ஸ் (Ambulance) நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. Motorola Edge 50 Neo: புத்தம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!
இந்த விபத்தில் (Road Accident) அபர்ணாவின் குடும்பத்தினர் 4 பேர் உட்பட மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், அபர்ணாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இதனையடுத்து, இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், 2 வாகனங்களிலும் ஏதேனும் பழுது உள்ளனவா என்று பரிசோதனை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.