Pro Kabaddi League 2024 Final: புரோ கபடி லீக் இறுதிப்போட்டி.. புனே, ஹரியானா அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை..!

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி போட்டி புனேரி பல்தான் மற்றும் அரியானா ஸ்டீஙர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது.

Pro Kabaddi League 2024 Final: புரோ கபடி லீக் இறுதிப்போட்டி.. புனே, ஹரியானா அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை..!

மார்ச் 1, ஹைதராபாத் (Hyderabad): 10-வது சீசன் புரோ கபடி லீக் போட்டி (Pro Kabaddi League) ஆனது, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த புரோ கபடி லீக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். அதில் முதல் 4 இடத்தைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெரும் அணிகள் இறுதி போட்டிக்குள் நுழையும். Bomb Threat To Tamilnadu Head Secratariate: தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு..!

அதன்படி புனேரி பல்டான் (Puneri Paltan) மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் (Haryana Steelers) அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இப்போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு வளாகத்தில் (GMC Balayogi Sports Complex) நடைபெறும்.

(The above story first appeared on LatestLY on Mar 01, 2024 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).