SMP Vs NRK: டிஎன்பிஎல் 16வது லீக் போட்டி.. மதுரை - நெல்லை அணிகள் இன்று மோதல்..!

2025 டிஎன்பிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில், இன்று சீசெம் மதுரை பாந்தர்ஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

SMP Vs NRK: டிஎன்பிஎல் 16வது லீக் போட்டி.. மதுரை - நெல்லை அணிகள் இன்று மோதல்..!
SMP Vs NRK (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 18, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று முடிந்தன. தொடர்ந்து, 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல், ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 17) நடைபெற்ற 15வது லீக் போட்டியில், கோவை அணியை வீழ்த்தி திருச்சி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. TGC Vs LKK: 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி..!

சீசெம் மதுரை பாந்தர்ஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் (Siechem Madurai Panthers Vs Nellai Royal Kings):

இந்நிலையில், இன்று (ஜூன் 18) சீசெம் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் (SMP Vs NRK, Match 16) அணிகள் மோதுகின்றன. என்எஸ் சதுர்வேத் தலைமையிலான மதுரை அணி, அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், நெல்லை அணி 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகள் முடிவில்லை. இந்த தொடரில், மதுரை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. நெல்லை அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்றுள்ளது.

சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள்:

என்எஸ் சதுர்வேத் (கேப்டன்), ராம் அரவிந்த், பால்சந்தர் அனிருத், அதீக் உர் ரஹ்மான், சி சரத் குமார், ஷங்கர் கணேஷ், பி சரவணன், முருகன் அஷ்வின், எஸ் ராஜலிங்கம், பி விக்னேஷ், குர்ஜப்னீத் சிங், அஜய் சேத்தன் ஜே, தீபேஷ் டி, சூர்யா ஆனந்த் எஸ், கார்த்திக் மெய்யப்பன், கணேஷ் எஸ், சஞ்சீவ் குமார், ஷ்யாம் சுந்தர் எஸ், கவுதம் தாமரை கண்ணன்.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீரர்கள்:

அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருஸ்வாமி, பிஎஸ் நிர்மல் குமார், என்எஸ் ஹரிஷ், சோனு யாதவ், சச்சின் ரதி, முகமது அத்னான் கான், வள்ளியப்பன் யுதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், ராக்கி பாஸ்கர், எஸ் விஜய குமார், அஜய் கிருஷ்ணன், டி சந்தோஷ் குமார், ஜே ரோஹன், உதய் குமார் எம், கரண் சம்பத், செல்வகணபதி எஸ், எஸ் ரிஷீக் குமார், அருண் யோகி, அதிஷ் எஸ் ஆர்.

(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).