SS Vs CSG Toss Update: சேப்பாக் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றிப் பயணம் தொடருமா..?

2025 டிஎன்பிஎல், சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 17வது லீக் போட்டியில், சேப்பாக் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

SS Vs CSG Toss Update (Photo Credit: @StarSportsTamil X)

ஜூன் 19, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று முடிந்தன. தொடர்ந்து, 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல், ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 18) நடைபெற்ற 16வது லீக் போட்டியில், நெல்லை அணியை வீழ்த்தி மதுரை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SS Vs CSG: டிஎன்பிஎல் 17வது மேட்ச்.. சேலம் - சேப்பாக் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Salem Spartans vs Chepauk Super Gillies):

இந்நிலையில், இன்று (ஜூன் 19) சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (SS Vs CSG, Match 17) அணிகள் மோதுகின்றன. அபிஷேக் தலைமையிலான சேலம் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேலம் அணி 6 போட்டியிலும், சேப்பாக் அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில், சேலம் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக் அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபராஜித் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

சேலம் ஸ்பார்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

ஹரி நிஷாந்த், எஸ் அபிஷேக் (கேப்டன்), ராஜேந்திரன் விவேக், நிதிஷ் ராஜகோபால், ஆர் கவின், சன்னி சந்து, எஸ் ஹரிஷ் குமார், எம் முகமது, எம் பொய்யாமொழி, கார்த்திக் மணிகண்டன், ரஹில் ஷா.

இம்பாக்ட்: ஜே கௌரி சங்கர், ஆர் அலெக்சாண்டர், தேவ் ராகுல், ஈஷ்வர் எம், பூபதி குமார். SL Vs BAN 1st Test, Day 3: பதும் நிசங்கா அபார சதம்.. இலங்கை 368 ரன்கள் குவிப்பு..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (பிளேயிங் லெவன்):

கே ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், பாபா அபராஜித் (கேப்டன்), என் ஜெகதீசன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், எஸ் தினேஷ் ராஜ், அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ், ஜே பிரேம் குமார், எம் சிலம்பரசன்

இம்பாக்ட்: என் சுனில் கிருஷ்ணா, அர்ஜுன் மூர்த்தி, ஆர் ராஜன், ராஜலிங்கம் ஜி, கிருபாகர் ரவீந்தர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement