SS Vs CSG: டிஎன்பிஎல் 17வது மேட்ச்.. சேலம் - சேப்பாக் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

2025 டிஎன்பிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில், இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

SS Vs CSG: டிஎன்பிஎல் 17வது மேட்ச்.. சேலம் - சேப்பாக் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
SS Vs CSG (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 19, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று முடிந்தன. தொடர்ந்து, 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல், ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 18) நடைபெற்ற 16வது லீக் போட்டியில், நெல்லை அணியை வீழ்த்தி மதுரை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SMP Vs NRK: டிஎன்பிஎல் 16வது லீக் போட்டி.. மதுரை - நெல்லை அணிகள் இன்று மோதல்..!

சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Salem Spartans vs Chepauk Super Gillies):

இந்நிலையில், இன்று (ஜூன் 19) சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (SS Vs CSG, Match 17) அணிகள் மோதுகின்றன. அபிஷேக் தலைமையிலான சேலம் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேலம் அணி 6 போட்டியிலும், சேப்பாக் அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில், சேலம் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக் அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள்:

எஸ் அபிஷேக் (கேப்டன்), ஹரி நிஷாந்த், ராஜேந்திரன் விவேக், நிதிஷ் ராஜகோபால், ஆர் கவின், சன்னி சந்து, பூபதி குமார், எஸ் ஹரிஷ் குமார், எம் முகமது, ஈஷ்வர் எம், எம் பொய்யாமொழி, ரஹில் ஷா, எஸ் அஜித் ராம், எம்இ யாழ் அருண் மொழி, தேவ் ராகுல்வி, தேவ் ராகுல், ஜே. சங்கர், பவித்ரன் ஆர், ஹிமாலயா. SL Vs BAN 1st Test, Day 2: வலுவான நிலையில் வங்கதேசம்.. முஷ்பிகுர் ரஹீம் சதமடித்து அசத்தல்..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:

பாபா அபராஜித் (கேப்டன்), கே ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், என் ஜெகதீசன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், என் சுனில் கிருஷ்ணா, எஸ் தினேஷ் ராஜ், அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ், ஜே பிரேம் குமார், எம் சிலம்பரசன், ஆர் ராஜன், அர்ஜுன் கான், ராஜாகர், ரோஹிராம் மூர்த்தி, ரோஹித்ராம் மூர்த்தி, சச்சின் பி, ஆஷிக் ஸ்ரீனிவாஸ்.

(The above story first appeared on LatestLY on Jun 19, 2025 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).