LKK Vs ITT Toss Update: திருப்பூர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பாதைக்கு திரும்புமா கோவை..?

2025 டிஎன்பிஎல், லைகா கோவை கிங்ஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதும் 22வது லீக் போட்டியில், திருப்பூர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

LKK Vs ITT Toss Update (Photo Credit: @StarSportsTamil X)

ஜூன் 24, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து, 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 23) நடைபெற்ற 21வது லீக் போட்டியில், திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. LKK Vs ITT: டிஎன்பிஎல் 22வது மேட்ச்.. கோவை - திருப்பூர் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

லைகா கோவை கிங்ஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (Lyca Kovai Kings Vs Idream Tiruppur Tamizhans):

இந்நிலையில், இன்று (ஜூன் 24) லைகா கோவை கிங்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (LKK Vs ITT, Match 22) அணிகள் மோதுகின்றன. ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கோவை அணி 4 போட்டியிலும், திருப்பூர் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில், கோவை அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. திருப்பூர் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

லைகா கோவை கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

ஜிதேந்திர குமார், சுரேஷ் லோகேஷ்வர், பாலசுப்ரமணியம் சச்சின், கே விஷால் வைத்யா, ஆந்த்ரே சித்தார்த் சி, ஷாருக் கான் (கேப்டன்), குரு ராகவேந்திரன், மணிமாறன் சித்தார்த், ஆர் திவாகர், பி புவனேஸ்வரன், ஜாதவேத் சுப்ரமணியன்.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (பிளேயிங் லெவன்):

அமித் சாத்விக், துஷார் ரஹேஜா, பிரதோஷ் ரஞ்சன் பால், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), முகமது அலி, உத்திரசாமி சசிதேவ், எம் மதிவண்ணன், ஆர் சிலம்பரசன், எசக்கிமுத்து ஏ, எஸ் மோகன் பிரசாத், டி.நடராஜன்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement