
ஜூன் 24, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து, 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 23) நடைபெற்ற 21வது லீக் போட்டியில், திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. CSG Vs TGC: சேப்பாக் த்ரில் வெற்றி.. நடப்பு தொடரில் ஆதிக்கம்..!
லைகா கோவை கிங்ஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (Lyca Kovai Kings Vs Idream Tiruppur Tamizhans):
இந்நிலையில், இன்று (ஜூன் 24) லைகா கோவை கிங்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (LKK Vs ITT, Match 22) அணிகள் மோதுகின்றன. ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கோவை அணி 4 போட்டியிலும், திருப்பூர் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில், கோவை அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. திருப்பூர் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள்:
ஜிதேந்திர குமார், சுரேஷ் லோகேஷ்வர், பாலசுப்ரமணியம் சச்சின், ஆந்த்ரே சித்தார்த் சி, ஷாருக் கான் (கேப்டன்), குரு ராகவேந்திரன், மாதவ பிரசாத், ஆர் திவாகர், மணிமாறன் சித்தார்த், பி புவனேஸ்வரன், ஜாதவேத் ரோஹித்யா சுப்ரமணியன், என் கபிலன், பி ஆதித்யா சுப்ரமணியன், பி ஆதித்யா, கே விஷாலிங், கே. வித்யூத், கோவிந்த் ஜி, பிரதீப் விஷால் எல், அம்ப்ரிஷ்.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள்:
அமித் சாத்விக், துஷார் ரஹேஜா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன் பால், உத்திரசாமி சசிதேவ், டேரில் ஃபெராரியோ, முகமது அலி, எஸ் மோகன் பிரசாத், ஆர்.சிலம்பரசன், டி.நடராஜன், பிரபஞ்சனா, கே, பிரபன்னிபாலன், எசக்கிமுத்து ஏ. சி.வி.அச்யுத், வி.அனோவங்கர், பாலு சூர்யா, கே.ராஜ்குமார், எம்.மதிவண்ணன், எஸ்.ராதாகிருஷ்ணன்.