CSG Vs SMP: டிஎன்பிஎல் 25வது லீக் போட்டி.. நாளை சேப்பாக் - மதுரை அணிகள் மோதல்..!

2025 டிஎன்பிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில், நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

CSG Vs SMP (Photo Credit: Facebook)

ஜூன் 27, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. தற்போது, இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 4வது சுற்று லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். Pat Cummins: 62 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் புதிய சாதனை..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (Chepauk Super Gillies Vs Siechem Madurai Panthers):

இந்நிலையில், நாளை (ஜூன் 28) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் (CSG Vs SMP, Match 25) அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, நாளை பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்குகிறது. பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணி, என்.எஸ்.சதுர்வேத் தலைமையிலான மதுரை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 3 போட்டியிலும், மதுரை அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில், சேப்பாக் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மதுரை அணி 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:

கே ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், என் ஜெகதீசன், விஜய் சங்கர், பாபா அபராஜித் (கேப்டன்), ஸ்வப்னில் சிங், எஸ் தினேஷ் ராஜ், அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ், ஜே பிரேம் குமார், எம் சிலம்பரசன், ஆஷிக் கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், ஆர் ராஜன், அர்ஜுன் கான் சுன்பா ஸ்ரீனிவாஸ், ஆர் ராஜன், அர்ஜூன் கான் கிருஷ்ணா மூர்த்தி, ஆர். ராஜலிங்கம் ஜி, சச்சின் பி.

சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள்:

ராம் அரவிந்த், பால்சந்தர் அனிருத், என்.எஸ்.சதுர்வேத் (கேப்டன்), எஸ்.கணேஷ், அதீக் உர் ரஹ்மான், சி.சரத் குமார், முருகன் அஸ்வின், ஜே.அஜய் சேத்தன், பி.சரவணன், குர்ஜப்னீத் சிங், எஸ்.ராஜலிங்கம், சூர்யா ஆனந்த்.எஸ், எஸ்.எஸ்.ராஜலிங்கம், எஸ்.எஸ்.கார்த்திக் மேவ் குமார், ஷங்கர் மேய்வ் குமார், கணேஷ் தேவேந்திரன், ஷங்கர் மேய்வ் குமார், கணேஷ். சுந்தர், கவுதம் தாமரை கண்ணன்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement