ஜூன் 27, பார்படாஸ் (Sports News): ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, நேற்று முன்தினம் (ஜூன் 25) பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியும் முதல் இன்னிங்ஸில் 190 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது. NRK Vs DD: 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி..!
பேட் கம்மின்ஸ் சாதனை:
இந்நிலையில், இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர், முதல் இன்னிங்ஸில் 18 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை பேட் கம்மின்ஸ் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1958 - 1963ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிச்சி பெனாட் 28 போட்டிகளில் 138 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இதை தவிர, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையும் பேட் கம்மின்ஸ் (35 போட்டிகளில் 139* விக்கெட்டுகள்) பெற்றுள்ளார். முதலிடத்தில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 48 டெஸ்ட் போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய கேப்டன்:
- 139* - பேட் கம்மின்ஸ் (63 இன்னிங்ஸ்)
- 138 - ரிச்சி பெனாட் (56 இன்னிங்ஸ்)
- 41 - பாப் சிம்ப்சன் (55 இன்னிங்ஸ்)
- 39 - இயன் ஜான்சன் (27 இன்னிங்ஸ்)
- 31 - மான்டி நோபல் (24 இன்னிங்ஸ்)