NZ Vs SA: பேட்டிங்கில் சொதப்பிய தென்னாப்பிரிக்கா.. நியூசிலாந்து வெற்றிக்கு 135 ரன்கள் இலக்கு..!

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5வது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் அடித்துள்ளது.

NZ Vs SA 1st Batting (Photo Credit: @ESPNcricinfo X)

ஜூலை 22, ஹராரே (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். நடந்து முடிந்த 4 லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில், ஜிம்பாப்வே அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், முதல் இரண்டு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிபோட்டியில் மோதும். அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். NZ Vs SA, Toss: நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. பழி தீர்க்குமா தென்னாப்பிரிக்கா..?

நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (New Zealand Vs South Africa):

இந்நிலையில், இன்று (ஜூலை 22) நடைபெறும் 5வது லீக் போட்டியில், நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, ராஸ்ஸி வான் டெர் டுசென் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். நியூசிலாந்து அணி சார்பில் ஜேக்கப் டஃபி, ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னர் தலா 2 விக்கெட், வில்லியம் ஓரூர்க் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டிம் சீஃபர்ட், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஜகரி ஃபௌல்க்ஸ், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓரூர்க்.

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்):

ரீசா ஹென்ட்ரிக்ஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென் (கேப்டன்), ரூபின் ஹெர்மன், டெவால்ட் ப்ரீவிஸ், அண்டில் சிமெலேன், ஜார்ஜ் லிண்டே, செனுரன் முத்துசாமி, ஜெரால்ட் கோட்ஸி, நகாபயோம்சி பீட்டர், க்வேனா மபாகா.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement