AFG Vs PAK: பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா அபாரம்.. ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 183 ரன்கள் இலக்கு..!
முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (AFG Vs PAK T20I) அணிகள் மோதும் முதலாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் அடித்துள்ளது.
ஆகஸ்ட் 29, ஷார்ஜா (Sports News): ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணி யுஏஇ அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் இன்று (ஆகஸ்ட் 29) முதல் தொடங்கி செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில், முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிபோட்டியில் (செப்டம்பர் 07) மோதும். அனைத்து போட்டிகளும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும். ZIM Vs SL 1st ODI: இலங்கை த்ரில் வெற்றி.. ஜிம்பாப்வே இறுதிவரை போராடி தோல்வி..!
ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (Afghanistan Vs Pakistan):
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் (AFG Vs PAK) அணிகள் மோதுகின்றன. ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 53* ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். ஆப்கானிஸ்தான் சார்பில் பரித் அகமது மாலிக் 2, அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, பரித் அகமது மாலிக். AFG Vs PAK, Toss: ஆப்கானிஸ்தானிற்கு எதிரான தொடக்க ஆட்டம்.. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு..!
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம்.
(The above story first appeared on LatestLY on Aug 29, 2025 10:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

