ஆகஸ்ட் 29, ஹராரே (Sports News): இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜிம்பாப்வே - இலங்கை (ZIM Vs SL) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (ஆகஸ்ட் 29) இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்கியது. AFG Vs PAK, Toss: ஆப்கானிஸ்தானிற்கு எதிரான தொடக்க ஆட்டம்.. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு..!
ஜிம்பாப்வே எதிர் இலங்கை (Zimbabwe Vs Sri Lanka):
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 298 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 76 ரன்கள், ஜனித் லியனகே 70* ரன்கள், கமிந்து மெண்டிஸ் 57 ரன்கள் அடித்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ரிச்சர்ட் ங்கராவா 2, பிளசிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இலங்கை த்ரில் வெற்றி:
இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்தில் பிரையன் பென்னட் மற்றும் அனுபவ வீரர் பிரெண்டன் டெய்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். இதனையடுத்து, பென் குர்ரன் மற்றும் கேப்டன் சீன் வில்லியம்ஸ் நிதானமாக விளையாடி இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சீன் வில்லியம்ஸ் 57 ரன்னிலும், பென் குர்ரன் 70 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வெஸ்லி மாதேவெரே 8 ரன்னில் நடையை கட்டினார். இதன்பின்னர், ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ராசா - டோனி முனியோங்கா இணை அபாரமாக விளையாடினர். பரபரப்பான இறுதி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் சிக்கந்தர் ராசா 92 ரன்னில் அவுட்டாகினர். அடுத்தடுத்த 2 பந்துகளில் பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்கராவா டக் அவுட்டாக, தில்ஷான் மதுஷங்க 'ஹாட்ரிக்' விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 291 ரன்கள் அடித்தது. இதன்மூலம், இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. டோனி முனியோங்கா 43* ரன்களுடன் இறுதிவரை போராடினார். ZIM Vs SL 1st ODI: இலங்கை அபார பேட்டிங்.. ஜிம்பாப்வே வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு..!
ஜிம்பாப்வே அணி வீரர்கள்:
பென் குர்ரன், பிரையன் பென்னட், பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதேவெரே, டோனி முனியோங்கா, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, பிளசிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, மஹேஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க.