ENG Vs SA 1st ODI Batting 1st (Photo Credit: @cricbuzz X)

செப்டம்பர் 02, லீட்ஸ் (Sports News): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா (ENG Vs SA) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (செப்டம்பர் 02) லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரை பேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம். PKL 2025: பிகேஎல் 2025; டெல்லி - பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் - பாட்னா அணிகள் இன்று மோதல்..!

இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (England Vs South Africa):

ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 24.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேமி ஸ்மித் 54 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். தென்னாப்பிரிக்கா சார்பில் கேஷவ் மகாராஜ் 4, வியான் முல்டர் 3, நந்த்ரே பர்கர் மற்றும் லுங்கி நிகிடி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேஷவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி.