PAK Vs AFG: இப்ராஹிம் சத்ரான் - செடிகுல்லா அடல் இணை அபாரம்.. பாகிஸ்தான் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்கு..!

முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 4வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் அடித்துள்ளது.

PAK Vs AFG 4th Match (Photo Credit: @ESPNcricinfo X)

செப்டம்பர் 02, ஷார்ஜா (Sports News): ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் (செப்டம்பர் 07) மோதும். அனைத்து போட்டிகளும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும். ENG Vs SA 1st ODI: இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் (Pakistan Vs Afghanistan):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 02) நடைபெறும் 4வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் (PAK Vs AFG) அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 65 ரன்கள், செடிகுல்லா அடல் 64 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் சார்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 4, சைம் அயூப் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், முகமது ஹாரிஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், சுபியான் முகீம்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மதுல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), அல்லா கசன்ஃபர், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement