UAE Vs AFG: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. யுஏஇ வெற்றி பெற 189 ரன்கள் இலக்கு..!
முத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஆப்கானிஸ்தான் (UAE Vs AFG T20I) அணிகள் மோதும் 3வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் அடித்துள்ளது.
செப்டம்பர் 01, ஷார்ஜா (Sports News): ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணி யுஏஇ அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஆகஸ்ட் 29 முதல் தொடங்கி செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் (செப்டம்பர் 07) மோதும். அனைத்து போட்டிகளும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும். BAN Vs NED 2nd T20I: வங்கதேச அணி இமாலய வெற்றி.. நெதர்லாந்து தொடர் தோல்வி..!
ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஆப்கானிஸ்தான் (United Arab Emirates Vs Afghanistan):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 01) நடைபெறும் 3வது போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் - ஆப்கானிஸ்தான் (UAE Vs AFG) அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முஹம்மது வசீம் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 63 ரன்கள், செடிகுல்லா அடல் 54 ரன்கள் அடித்தனர். இறுதியில் கரீம் ஜனத் 10 பந்தில் 23* ரன்கள் மற்றும் அஸ்மதுல்லா உமர்சாய் 12 பந்தில் 20* ரன்கள் என அதிரடி காட்டினர். யுஏஇ அணி சார்பில் சாகிர் கான் மற்றும் முஹம்மது ரோஹித் கான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்கள்:
முஹம்மது ஜோஹைப், முஹம்மது வசீம் (கேப்டன்), ஆசிப் கான், ராகுல் சோப்ரா, ஈதன் டிசோசா, ஹர்ஷித் கவுஷிக், துருவ் பராஷர், சாகிர் கான், ஹைதர் அலி, முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக். UAE Vs AFG, Toss: யுஏஇ - ஆப்கானிஸ்தான் மோதும் 3வது போட்டி.. யுஏஇ டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, கரீம் ஜனத், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான் (கேப்டன்), முகமது நபி, ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
(The above story first appeared on LatestLY on Sep 01, 2025 10:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

