UAE Vs AFG, Toss (Photo Credit: @ESPNcricinfo X)

செப்டம்பர் 01, ஷார்ஜா (Sports News): ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணி யுஏஇ அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஆகஸ்ட் 29 முதல் தொடங்கி செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் (செப்டம்பர் 07) மோதும். அனைத்து போட்டிகளும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும். BAN Vs NED 2nd T20I: 103 ரன்களுக்கு சுருண்டது நெதர்லாந்து.. வங்கதேசம் அபார பந்துவீச்சு..!

ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஆப்கானிஸ்தான் (United Arab Emirates Vs Afghanistan):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 01) நடைபெறும் 3வது போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் - ஆப்கானிஸ்தான் (UAE Vs AFG) அணிகள் மோதுகின்றன. முஹம்மது வசீம் தலைமையிலான யுஏஇ அணி, ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 12 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், யுஏஇ அணி 3 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முஹம்மது வசீம் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்கள்:

முஹம்மது ஜோஹைப், முஹம்மது வசீம் (கேப்டன்), ஆசிப் கான், ராகுல் சோப்ரா, ஈதன் டிசோசா, ஹர்ஷித் கவுஷிக், துருவ் பராஷர், சாகிர் கான், ஹைதர் அலி, முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, கரீம் ஜனத், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான் (கேப்டன்), முகமது நபி, ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி.