Virat Kohli Autograph: பயிற்சியின்போது தன்னை காணவந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய விராட்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை 2023 தொடரின் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா உட்பட பல அதிரடி ஆட்டக்காரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Virat Kohli Autograph: பயிற்சியின்போது தன்னை காணவந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய விராட்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
Virat Kohli Autograph (Photo Credit: Twitter)

அக்டோபர் 08, சென்னை (Sports News): ஐசிசி உலகக்கோப்பை போட்டித்தொடர் 2023 (ICC Men's Cricket World Cup 2023), இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் (Chepauk, Chennai) மைதானத்தில், நடப்பு தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா (India Vs Australia CWC 2023) அணியின் வீரர்கள் மோதிக்கொள்கின்றனர். இதனால் போட்டி இந்திய மண்ணில் இருதரப்பு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இருக்கும் ரசிகர்கள் பலரும் முன்னதாகவே போட்டியை நேரில் காணுவதற்கு டிக்கெட் வாங்கி காத்திருக்கின்றனர். Attibele Fire Accident: தமிழக-கர்நாடக எல்லையில் பட்டாசு குடோன் வெடிவிபத்து விவகாரம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.! 

இன்று இந்திய நேரப்படி மதியம் 02:00 மணியளவில் ஆட்டம் தொடங்குகிறது. இதனால் சேப்பாக்கம் மைதானமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள், ஆஸி., அணியின் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி எடுத்தனர்.

அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli Autograph), ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். அவரின் செயல் விராட் கோஹ்லி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய அணியில் (Team India Squad Today IND Vs AUS) ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல்க் கில், ஷர்துல்க் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் (Team Australia Squad Today IND Vs AUS) பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Oct 08, 2023 01:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).