அக்டோபர் 08, அத்திபெலே (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் (Bangalore), கர்நாடக - தமிழ்நாடு (Karnataka Tamilnadu Border) எல்லையில் உள்ள அத்திப்பள்ளி (Attibele) பகுதியில், தீபஒளி (Deepawali 2023) பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் தற்காலிக குடோன்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இவ்வாறாக அமைக்கப்பட்ட குடோனில் நேற்று பட்டாசுகளை (Fire Crackers) இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். குடோன் அமைந்திருந்த இடம், கர்நாடக மாநில எல்லை முடியும் இடத்தில் இருந்து சிலமீட்டர் தூரமே ஆகும்.
இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் பட்டாசுகளை பணியாளர்கள் குடோனில் வைத்துக்கொண்டு இருந்தபோது, திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. Israel Under Attack: அப்பாவி மக்களின் வீட்டிற்குள் புகுந்து தொடரும் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சனை விஸ்வரூபம்.. பதிலடியில் இஸ்ரேல் இராணுவம்.!
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தீயை அணைக்கும் பணியையும் மேற்கொண்டனர். இறுதியில் 12 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், படுகாயத்துடன் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
தற்போது, பலி எண்ணிக்கை என்பது 13 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழந்த செய்தி அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) தனது இரங்கலை பதிவு செய்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.
எல்லையில் பட்டாசு குடோன் தீப்பிடித்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த அம்மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் (DK Shivakumar), உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அங்கு உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசின் சார்பில் தலா ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தார். இன்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா (Siddaramaiah) நேரில் சென்று பார்வையிடுகிறார்.
#WATCH | Karnataka: Morning visuals from a firecracker store in Attibele where 12 people lost their lives after a fire broke out in the shop yesterday.
Karnataka CM Siddaramaiah is scheduled to visit the accident site today. pic.twitter.com/kzb72oVp2T
— ANI (@ANI) October 8, 2023