WWE Superstar Spectacle: ஒரேநாளில் விற்றுத்தீர்ந்த WWE போட்டிக்கான டிக்கெட்டுகள்; கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.. ஹைத்ராபாத்தில் சந்திப்போம்..!
சிறுவயதில் நாம் பார்த்து ரசித்த WWE விளையாட்டுப்போட்டி, இந்தியாவில் மீண்டும் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப் 8ம் தேதி வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 20, ஹைதராபாத் (WWE Superstar Spectacle): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், காச்சிபௌலி விளையாட்டு மைதானத்தில் வைத்து செப்டம்பர் மாதம் 08ம் தேதி WWE Superstar Spectacle விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது.
இதற்காக சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டியாளர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், ஒரேநாளில் அனைத்து டிக்கெட்டுகளை விற்று தீர்ந்துள்ளன. Google G-Mail Alert: 2 ஆண்டுகளாக ஜி-மெயில் யூஸ் பண்ணாம வச்சிருக்கீங்களா?.. எச்சரிக்கை விடுத்த கூகுள்; இன்றோடு அதோகதி.!
Book My Show நிறுவனம் சார்பில் நடத்தப்படும் WWE போட்டியின் டிக்கெட்டுகளை பலரும் www.bookmyshow.com என்ற இணையத்திற்கு சென்று முன்பதிவு செய்துகொண்டனர். ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை என டிக்கெட் தொகை இருந்தாலும், கவலையின்றி தங்களுக்குக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
https://in.bookmyshow.com/hyderabad/sports/wwe-superstar-spectacle/ET00365722 என்ற பக்கத்திற்கு நேரடியாக சென்று அல்லது Book My Show பக்கத்திற்கு சென்று, WWE Superstar Spectacle என தேடினால் வரும் Book Option மூலமாக நாம் உள்நுழைந்து நமக்கான இருப்பிடத்தை தேர்வு செய்யலாம்.
ரூ.5,000, ரூ.15,000 வரையில் உள்ள தொகைகளில், நாம் செலுத்த விரும்பும் தொகையை தேர்வு செய்தால், அதன் அருகே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நமக்கான இருப்பிடத்தை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்படும். அதில் நாம் நமது இருப்பிடத்தை தேர்வு செய்து பணத்தை செலுத்தினால் நமக்கான டிக்கெட் உறுதி செய்யப்படும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)