Silver Bat to Virat Kohli: விராட் கோலிக்கு வெள்ளியில் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட் பரிசளித்த இலங்கை வீரர்கள்.! மகிழ்ச்சியில் விராட்..!
கோலிக்கு இலங்கையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கை அணியில் விளையாடும் பல வீரர்கள், அவரின் மிகத்தீவிர பிரியர்கள் என்றும் கூறலாம்.
செப்டம்பர் 09, இலங்கை (Cricket News): ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 போட்டித்தொடரில், இந்தியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நாளை இலங்கையில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் கவனிக்கத்தக்கவர் விராட் கோலி (Virat Kohli). இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம் என்றே கூறலாம். கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டக்காரராக இவர், தற்போது இலங்கையில் இந்திய அணியுடன் முகாமிட்டுள்ளார். Mouni Roy & Suraj Nambiar: கணவரோடு சென்றாலும் கவர்ச்சிக்கு மறைவு கிடையாது; தொப்புளை திறந்து காண்பித்து ஜாலியாக போஸ் கொடுத்த மௌனி ராய்.!

கோலிக்கு இலங்கையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கை அணியில் விளையாடும் பல வீரர்கள், அவரின் மிகத்தீவிர பிரியர்கள் என்றும் கூறலாம். கடந்த இலங்கை - இந்தியா இடையேயான கிரிக்கெட் ஆட்டம் முடிந்ததும், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்து சென்றனர்.
இந்நிலையில், தற்போது பயிற்சியில் இருக்கும் விராட் கோலியை நேரில் சந்தித்த அந்நாட்டு வீரர்கள், வெள்ளியினால் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்டை அவருக்கு வழங்கி மகிழ்ந்தனர். வரும் 12ம் தேதி இந்தியா - இலங்கை அணிகள் மோதிக்கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Sep 09, 2023 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

