ZIM Vs NZ 1st Test, Day 1: 67 ரன்னுக்கு 4 விக்கெட்கள் இழப்பு.. தடுமாறும் ஜிம்பாப்வே..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே 4 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs NZ 1st Test, Day 1 Lunch (Photo Credit: @ZimCricketv X)

ஜூலை 30, புலவாயோ (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 30) புலவாயோவில் தொடங்கியது. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், கிளென் பிளிப்ஸ் ஆகியோருக்கு பதிலாக மேத்யூ ஃபிஷர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். Tom Latham: முதல் டெஸ்டில் டாம் லாதம் விலகல்.. அணியை வழிநடத்தும் மிட்செல் சான்ட்னர்..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):

இந்நிலையில், கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை டெஸ்ட் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஜிம்பாப்வே அணி இதுவரை வெற்றி பெறவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தடுமாறும் ஜிம்பாப்வே:

அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்கள் பிரையன் பென்னட் 6, பென் குர்ரான் 13 ரன்னில் மேட் ஹென்றி பந்தில் அவுட்டாகினர். அடுத்து வந்த சீனியர் வீரர் சீன் வில்லியம்ஸ் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். நிதானமாக விளையாடி வந்த நிக் வெல்ச் 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் கிரேக் எர்வின் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):

பிரையன் பென்னட், பென் குர்ரான், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, மா தவன்கானா சிகா, நியூமன் நியாம்ஹுரி, வின்சென்ட் மசெகேசா, பிளெஸ்ஸிங் முசரபானி, தனகா சிவாங்கா.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டெவோன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, வில்லியம் ஓரூர்கே.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement