ஜூலை 29, புலவாயோ (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (ZIM Vs NZ) தொடரில் விளையாடவுள்ளது. ஏற்கனவே ஜிம்பாப்வேவில் நடந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது. இத்தொடர் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். ZIM Vs NZ 1st Test: ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்..!
கேப்டன் டாம் லாதம் விலகல்:
முன்னதாகவே நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், கிளென் பிளிப்ஸ் ஆகியோருக்கு பதிலாக மேத்யூ ஃபிஷர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் டாம் லாதம் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதனால், முதல் டெஸ்ட் போட்டிக்கு மிட்செல் சான்ட்னர் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மிட்செல் சான்ட்னர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை டெஸ்ட் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஜிம்பாப்வே அணி இதுவரை வெற்றி பெறவில்லை.
ஜிம்பாப்வே அணி:
பென் குர்ரான், பிரையன் பென்னட், நிக் வெல்ச், கிரேக் எர்வின் (கேப்டன்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, கிளைவ் மடாண்டே, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்சா, பிளெஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு, நியூமன் நியாம்ஹுரி, மா தவன்கானா, மா தவன்கானா, மா தவன்கானா சிகா, ராய் கையா.
நியூசிலாந்து அணி:
டெவோன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், அஜாஸ் பட்டேல், மாட் ஹென்றி, வில்லியம் ஓரூர்கே, ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிஷர், மேத்யூ ஃபிஷர்.