ZIM Vs SA 2nd Test, Day 2: கொத்துக் கொத்தாக விக்கெட்களை இழந்து தடுமாறும் ஜிம்பாப்வே.. தென்னாப்பிரிக்கா அபாரம்..!

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை, ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்களை இழந்து 88 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.

ZIM Vs SA 2nd Test, Day 2: கொத்துக் கொத்தாக விக்கெட்களை இழந்து தடுமாறும் ஜிம்பாப்வே.. தென்னாப்பிரிக்கா அபாரம்..!
ZIM Vs SA 2nd Test, Day 2 Tea (Photo Credit: @ProteasMenCSA X)

ஜூலை 07, புலவாயோ (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில், முன்னணி வீரர்களான கேப்டன் பவுமா, மார்க்கரம், ரபாடா, யான்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் கேசவ் மகாராஜ் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தினார். இந்நிலையில் காயம் காரணமாக கேசவ் மகாராஜ் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக வியான் முல்டர் அணியை வழிநடத்துகிறார். முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி (ZIM Vs SA 2nd Test) நேற்று (ஜூலை 06) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. Wiaan Mulder: வியான் முல்டர் முச்சதம் அடித்து அசத்தல்.. தென்னாப்பிரிக்க அணி அபாரம்..!

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா (Zimbabwe Vs South Africa):

அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு டோனி டி சோர்ஜி 10, லெசெகோ செனோக்வானே 3 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த டேவிட் பெடிங்ஹாம் 82, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 72 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 88 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 465 ரன்கள் அடித்தது. வியான் முல்டர் 264* ரன்கள், டெவால்ட் ப்ரீவிஸ் 15* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா அபாரம்:

இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டத்தில் டெவால்ட் ப்ரீவிஸ் 30 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய கேப்டன் முல்டர் 334 பந்தில் 367* ரன்கள் (49 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து மிகப் பெரிய சாதனை படைத்தார். மறுபுறம், கைல் வெர்ரேய்ன் 42* ரன்கள் அடித்தார். அப்போது, மதிய உணவு இடைவேளை வந்தது. தென்னாப்பிரிக்க அணி 114 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 626 ரன்கள் அடித்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு முதல் பந்தில் டகுட்ஸ்வானாஷே கைடானோ டக் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். தேநீர் இடைவேளை வரை, ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்களை இழந்து 88 ரன்கள் அடித்தது.

(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 06:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).