Wiaan Mulder (Photo Credit: @ClubCricketSA X)

ஜூலை 07, புலவாயோ (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில், முன்னணி வீரர்களான கேப்டன் பவுமா, மார்க்கரம், ரபாடா, யான்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் கேசவ் மகாராஜ் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தினார். இந்நிலையில் காயம் காரணமாக கேசவ் மகாராஜ் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக வியான் முல்டர் அணியை வழிநடத்துகிறார். முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி (ZIM Vs SA 2nd Test) நேற்று (ஜூலை 06) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. MS Dhoni Wedding Anniversary: எம்.எஸ். தோனி - சாக்ஷியின் திருமண நாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டி மகிழ்ந்த தம்பதி.!

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா (Zimbabwe Vs South Africa):

அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு டோனி டி சோர்ஜி 10, லெசெகோ செனோக்வானே 3 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த டேவிட் பெடிங்ஹாம் 82, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 72 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 88 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 465 ரன்கள் அடித்தது. வியான் முல்டர் 264* ரன்கள், டெவால்ட் ப்ரீவிஸ் 15* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

வியான் முல்டர் முச்சதம்:

இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டத்தில் டெவால்ட் ப்ரீவிஸ் 30 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய கேப்டன் முல்டர் 297 பந்தில் 300* ரன்கள் (38 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து சாதனை படைத்தார். இதற்கு முன்னர், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹசிம் அம்லா 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 311* ரன்கள் அடித்துள்ளார். அதன்பிறகு, வியான் முல்டர் தற்போது முச்சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். 100 ஓவர்கள் வரை தென்னாப்பிரிக்க 5 விக்கெட்களை இழந்து 524 ரன்கள் அடித்துள்ளது. கைல் வெர்ரேய்ன் 7* ரன்களுடன் விளையாடி வருகிறார்.