வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
தமிழ்நாட்டில் வரும் 24 மணிநேரத்தில் அதிக ஏப்பத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெயில் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பிப்ரவரி 23, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலை (Weather)-யில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் 36.6 செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 22 செல்சியஸ் அதிகமாகவும், ஏனைய இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் நிலவியது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30 - 34 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், 23-02-2025 மற்றும் 24-02-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 25-02-2025 முதல் 01-03-2025 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்: 23-02-2025 மற்றும் 24-02-2025 வரையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு
குறைவு. 25-02-2025 முதல் 27-02-2025 வரையில் அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். Gnanasekaran Case Update: கொள்ளை பணத்தில் பிரியாணி கடை, உல்லாச வாழ்க்கை.. ஞானசேகரன் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.!
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 23-02-2025 மற்றும் 24-02-2025 வரையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 - 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 25-02-2025 முதல் 27-02-2025 வரையில் அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி காணப்படும்.
சென்னை வானிலை (Chennai Weather Report) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):
இன்று (23-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை (24-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில்
பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்காக எச்சரிக்கை:
24-02-2025 முதல் 27-02-2025 வரையில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
24-02-2025 தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 25-02-2025 மற்றும் 26-02-2025 வரையில் தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அன்று தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Feb 23, 2025 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

