Thief | Gnanasekaran (Photo Credit: Pixabay / @News18Tamilnadu X)

பிப்ரவரி 22, சைதாப்பேட்டை (Chennai News): சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University Case), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி படித்து வந்தார். இவர் தனது காதலருடன் அண்ணா பல்கலை., வளாகத்தில் உள்ள பொறியாளர் அலுவலகத்திற்கு பின்புறம் பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மேலும், காதலரை அடித்து துரத்திவிட்டார். இந்த விஷயம் குறித்த புகாரில், மனைவியை பிரிந்து, பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்த ஞானசேகரன் (Gnanasekaran) என்ற நபர் கைது செய்யப்பட்டார். இவரிடம் சில காவல் அதிகாரிகள் இலவச பிரியாணி பெற்ற விஷயமும் விசாரணையில் தெரியவந்தது. அண்ணா பல்கலை., கிண்டி சாலையில் பிரியாணி கடை போட்டு, தனிமையில் ஒதுங்கும் காதல் ஜோடியை நோட்டமிட்டு இவ்வாறான அதிர்ச்சி செயலில் ஞானசேகரன் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

பெண்களுடன் உல்லாச வாழ்க்கை:

இந்நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்ற 7 வீடுகள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஞானசேகரனிடம், பள்ளிக்கரணை காவல்துறையினர் 3 நாட்கள் நீதிமன்ற காவல் அனுமதியை பெற்று விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். அவர் மொத்தமாக 7 வீடுகளில் இருந்து 250 சவரன் நகைகள், 1 ஸ்மார்ட்போன் போன்றவற்றை திருடி இருக்கிறார். இந்த நகைகளை விற்பனை செய்து கிடைத்த பணத்தில், பெண்களுடன் சொகுசாக உல்லாச வாழ்க்கையும் அவர் வாழ்ந்து வந்துள்ளார். Cyber Crime: சைபர் குற்றவாளிகளாக மாற்ற சிறப்பு பயிற்சி; கைதான நபர் அதிர்ச்சி தகவல்..!

Anna University (Photo Credit: @DDNewsTamil X)
Anna University (Photo Credit: @DDNewsTamil X)

கொள்ளை விசாரணை:

நகை கொள்ளை விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல்துறையினர், சிசிடிவி கேமிரா காட்சிகளின் பேரில் ஞானசேகரனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது, ஞானசேகரன் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் பாலியல் வழக்கில் முதலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. தற்போது பாலியல் வழக்கில் சிக்கிய ஞானசேகரனிடம், பள்ளிக்கரணை காவல்துறையினர் நகை கொள்ளை தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

வில்லா குடியிருப்புகள் டார்கெட்:

கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024 வரையில், தார் காரில் வந்து ஞானசேகரன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். கொள்ளை குற்றத்தையும் ஒப்புக்கொண்ட அவர் திருட்டு நகையிலேயே சொகுசு கார், பெண்களுடன் உல்லாச வாழ்க்கை, புதிய வீடு ஆகியவற்றையும் வாங்கி இருக்கிறார். தனித்தனியாக அமைக்கப்பட்டு இருக்கும் வில்லா (Villa House) குடியிருப்புகளை குறிவைத்தே கொள்ளை சம்பவமும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.