Mini Bus Accident: மினி பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்..!

விழுப்புரத்தில் மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், 15 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

Mini Bus Accident: மினி பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்..!
Accident (Photo Credit: Pixabay)

மே 16, திண்டிவனம் (Viluppuram News): ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மினி பேருந்தில் (Mini Bus) 20 மாணவர்கள் யோகா பயிற்சிக்காக சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் (National Highway) சென்று கொண்டிருக்கும் போது மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. Mother Murdered By Son: பெற்ற தாயை சுத்தியலால் அடித்துக் கொன்ற மகன்; கொலை செய்ய காரணம் என்ன..?

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து, மினி பேருந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர், போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பியது.

(The above story first appeared on LatestLY on May 16, 2024 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).