மே 16, அமராவதி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபுரம் மாவட்டம், கம்பதூர் மண்டலத்தில் உள்ள ஒய்.சி. பள்ளி பகுதியில் சுங்கம்மா (வயது 52) மற்றும் இவரது மகன் வெங்கடேசுலு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் கடந்த 13-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத் தேர்தலும், மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என தனது தாயாரிடம் வெங்கடேசுலு கூறியுள்ளார். Canada Forest Fire: கனடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ; சுமார் 6 ஆயிரம் பேர் மீட்பு..!

இதனையடுத்து, அவரது தாயார் சுங்கம்மா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோவில் சென்று ஓட்டு போட்டு வந்துள்ளார். பின்னர், வெங்கடேசுலு தனது தாய் சுங்கம்மா தான் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்று நினைத்துக்கொண்டு, கடும் கோபத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சுங்கம்மாவின் தலையில் சுத்தியலை (Hammer) கொண்டு பலமாக தாக்கியுள்ளார். இதில், அவருக்கு தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. வலியில் துடிதுடித்த சுங்கம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கம்பதூர் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.