Three Boys Drown In Lake: ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.. குடும்பத்தினர் சோகம்..!
விழுப்புரத்தில் உள்ள ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 04, விழுப்புரம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகேயுள்ள கோட்டமருதூர் கிராமத்தில் உள்ள ஏரியில் (Lake) நேற்று (அக்டோபர் 03) மாலை மீன் பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த தர்மா என்பவர் வலை வீசியுள்ளார். அப்போது, வலைக்குள் 2 சிறுவர்களின் உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். Jewellery Theft: தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு.. கொள்ளையர்கள் அட்டூழியம்..!
இதனையடுத்து, அரகண்டநல்லூர் காவல்துறையினர் அங்கு வந்து 2 சிறுவர்களின் உடல்களை மீட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மனம்பூண்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் ஜீவிதன் (வயது 10), தர்ஷன் (வயது 8) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், தங்களது மகன்களுடன் மேலும் ஒரு சிறுவனும் விளையாட வந்ததாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் ஏரிக்குள் தேடினர். அப்போது, மனம்பூண்டியைச் சேர்ந்த தரன் என்பவரது மகன் ஹரிஹரன் (வயது 11) என்ற சிறுவனின் உடல் (Drowning) கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, 3 சிறுவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 04, 2024 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

