Child Died After Falling From The Floor : 8வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை பரிதாப பலி... கதறி அழுத தாய்..! பெற்றோர்களே கவனம்.!!

சென்னையில் எட்டாவது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தால் மூன்று வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

Child Died After Falling From The Floor : 8வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை பரிதாப பலி... கதறி அழுத தாய்..! பெற்றோர்களே கவனம்.!!
Baby Death File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 13, சென்னை (Chennai): சென்னை நாவலூரில் ஓஎம்ஆர் சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருபவர் தான் மணிகண்டன். இவரது மனைவி ஜிஜி. இவர்கள் இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஆரவ் என்ற பெயரில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் தினமும் குழந்தையை குடியிருப்பின் கீழே விளையாட அழைத்து செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று குழந்தையை விளையாட வைக்க தாயார் அழைத்து சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு லிப்டில் சென்றுள்ளனர். அப்போது தாயார் ஐந்தாவது மாடியிலேயே இறங்க, ஆரவ் மட்டும் தனியாக எட்டாவது மாடிக்கு சென்றுள்ளார். தாய் இன்னும் வராத காரணத்தினால், ஆரவ் வீட்டின் பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்துள்ளார். அப்போது கால் தவறி திடீரென எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். Flood Relief: வெள்ள நிவாரணம் ரூ.6000... தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

இரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை தூக்கிக் கொண்டு கதறி அழுதபடி, தாயார் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின் காவலர்கள் அங்கு வந்து, குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

(The above story first appeared on LatestLY on Dec 13, 2023 06:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).