Five Students Arrested: சக மாணவரை சரமாரியாக தாக்கி வீடியோ வெளியிட்ட 5 மாணவர்கள் கைது..!
மயிலாடுதுறையில் சக மாணவரை தாக்கி வீடியோ வெளியிட்ட மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 16, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் ஐடிஐ-யில் (ITI) கடந்த 07-ஆம் தேதி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் படிக்கும் வகுப்பறைக்கு, மற்றொரு பிரிவில் படிக்கும் மாணவர் வந்துள்ளார். அதை மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் மாணவர் அவரை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மறுநாள் ஐடிஐ-க்கு வந்த மெக்கானிக்கல் பிரிவு மாணவரை, மாயூரநாதர் அருகே மேலமடவிளாகம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மற்றொரு பிரிவு மாணவர்கள், அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். Husband Dies By Suicide After killing Wife: குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு.. கணவன் தூக்குப்போட்டு தற்கொலை..!
மேலும், இதனை வாட்ஸ்அப் வீடியோகால் (WhatsApp Video Call) மூலம் நண்பர் ஒருவரை தொடர்புகொண்டு, அவரிடம் இன்னும் அடிக்கவா? எனக் கேட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, 5 மாணவர்களை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொண்டு சேர்த்தனர். மேலும், மற்றொரு மாணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 09:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

