Husband Dies By Suicide After Killing Wife: குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு.. கணவன் தூக்குப்போட்டு தற்கொலை..!

தர்மபுரியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband Dies By Suicide After Killing Wife: குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு.. கணவன் தூக்குப்போட்டு தற்கொலை..!
Murder Blood (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 16, பென்னாகரம் (Dharmapuri News): தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள ஏரியூர் திருத்தங்கல்மேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி கோவிந்தன் (வயது 55)-சின்னபொண்ணு (வயது 50). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி, தனியாக வசித்து வருகின்றனர். இதனால், கோவிந்தன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்துகொண்டும், ஆடுகளை மேய்த்து கொண்டும் வாழ்ந்து வருகின்றனர். Dog Show At Railway Stadium: 78வது சுதந்திர தின கொண்டாட்டம்.. ரயில்வே ஸ்டேடியத்தில் நாய் கண்காட்சி..!

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 15) விவசாய நிலத்தில் சின்னபொண்ணு ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கோவிந்தன், தனது மனைவியுடன் வழக்கம்போல தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து, தனது மனைவி சின்னபொண்ணுவின் தலைமீது (Murder) போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டோமே என அழுது புலம்பியுள்ளார். மேலும், தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என பயந்து, உடனே வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 09:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).