Three Old Men Arrested: 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; 3 முதியவர்கள் போக்சோவில் கைது..!
அரியலூரில் 13 வயது சிறுமியை 3 முதியவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 24, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட (Mental Impairment) சிறுமி என கூறப்படுகின்றது. இந்நிலையில், கடந்த ஜூலை 21-ஆம் தேதி அன்று பள்ளி விடுமுறை என்பதால், சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது தாயார் கூலி வேலைக்கு சென்றுள்ளார். Nepal Plane Crash: பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து; 19 பயணிகளின் நிலை என்ன..?
பின்னர், மாலையில் அவர் வீடு திரும்பும்போது அவரது வீட்டிற்கு சிலர் வந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது ராஜேந்திரன் (வயது 65), சின்னத்தம்பி (வயது 70), பன்னீர் செல்வம் (வயது 76) ஆகிய 3 பேரும் தன்னை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளனர் எனக் கூறி சிறுமி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

