ஜூலை 24, காத்மாண்டு (World News): நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் (Tribhuvan International Airport) இன்று (ஜூலை 24) காலை சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) விமானம் புறப்படும் போது ஓடு தளத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் காலை 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நேபாளத்தில் இருந்து போக்ரா செல்லும் விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🚨#BREAKING: A plane has crashed at Tribhuvan International Airport. Reports indicate the aircraft skidded off the runway during takeoff en route to Pokhara, carrying 19 passengers. Updates to follow.#Nepal #PlaneCrash #TribhuvanInternationalAirport #AviationSafety #Pokhara pic.twitter.com/aWErvcgPol
— RashmikaFanClub (@RashmikaFanClu1) July 24, 2024