Teen Dies Of Sunstroke: குலதெய்வத்தைக் கூட கும்பிட விடாத கொளுத்தியெடுக்கும் வெயில்.. சாமி கும்மிட போன சிறுவன் வெயிலின் தாக்கத்தால் பலி..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குலதெய்வ சாமியைக் கும்மிடச் சென்ற 14 வயது சிறுவன், வெயிலின் தாக்கத்தால் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Teen Dies Of Sunstroke: குலதெய்வத்தைக் கூட கும்பிட விடாத கொளுத்தியெடுக்கும் வெயில்.. சாமி கும்மிட போன சிறுவன் வெயிலின் தாக்கத்தால் பலி..!
Teen Dies Of Sunstroke (Photo Credit: @backiya28 X)

ஏப்ரல் 29, ராணிப்பேட்டை (Ranipet News): கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வெயிலானது வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து காலை 8 மணியிலிருந்தே வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் மக்கள் வெளியே செல்லவே அஞ்சும் நிலை வந்துள்ளது. தொடர்ந்து வெயிலினால் பல மரணங்கள் அரங்கேறி வருகிறது. International Dance Day 2024: "கண்ணிரண்டும் இசைபாட.. கையிரண்டும் தாளமிட.. காலிரண்டும் நடனமாட.." சர்வதேச நடன தினம்..!

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் (Ranipet district) ரத்தனகிரியை எடுத்த டிசி குப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சத்யா, மனைவி மற்றும் மகன்களுடன், நத்தம் பகுதியில் மலைமேல் உள்ள குலதெய்வமான அம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த நடந்து சென்றுள்ளார். அப்போது வழியில் கடும் வெயில் காரணமாக (Sunstroke) 14 வயது மூத்த மகன் அர்சன் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 29, 2024 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).