School Girl Rape: வீட்டை விட்டு வெளியேறி சென்ற பள்ளி மாணவி; அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

சென்னையில் வீட்டை விட்டு வெளியேறி சென்ற பள்ளி மாணவியை, வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

School Girl Rape: வீட்டை விட்டு வெளியேறி சென்ற பள்ளி மாணவி; அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Rape File pic (Photo Credit: Pixabay)

ஜூன் 05, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகள் வருகின்ற ஜூன் 10-ஆம் தேதி அன்று திறக்கவிருக்கும் நிலையில், கடந்த 30-ஆம் தேதி மாணவி தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். Live Firing In Swimming Pool: நீச்சல் குளத்தில் மகள்கள் கண்முன்னே தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கும்பல்; சிசிடிவி கேமிராவில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.!

இதனால் விரக்தியில் இருந்த மாணவி, தனது பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், பெற்றோர் வீட்டிற்கு வந்த பார்த்த போது, மகளை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் அவரை தேடி வந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அன்று மாணவி வீட்டிற்கு வந்தார். அப்போது, மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், மாணவி அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டம்பட்டிக்குச் சென்றுள்ளார். அங்கு வரதராஜ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது, அங்கு சென்ற மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் வரதராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jun 05, 2024 10:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).