ஜூன் 05, மீரட் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம் (Meerut Crime News), லோகியா நகர், ஜூர்ரான் பதாக் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நீச்சல் குளத்திற்கு, நேற்று தனது 2 மகள்களுடன் அர்ஷத் என்பவர் வந்திருந்தார். இவர் மீரட் நகரில் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் கும்பலில் அங்கம் வகிப்பவர் என கூறப்படுகிறது. இவருக்கும், எதிர்தரப்பு கும்பலுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் நடந்துள்ளன.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை:
இதனிடையே, தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து இந்தியாவே தேர்தல் திருவிழா கொண்டாட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு 09:51 மணியளவில் அர்ஷத்துக்கு எதிரான கும்பல் ஒன்று நீச்சல் குளத்திற்கு வந்து அர்ஷத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது. அவரின் தலையில் குண்டு பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். PM Narendra Modi's First Speech 2024 Elections: "என்டிஏ அமோக வெற்றி, நாட்டின் நலனுக்கு முடிவு" - பிரதமர் பரபரப்பு பேச்சு.. முழு விபரம் உள்ளே.!
மகள்கள் கண்முன்னே சோகம்:
அர்ஷத்தின் குழந்தைகள் வீட்டிற்கு கிளம்ப தயாராகிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த கும்பல் மகள்கள் கண்முன்னே தந்தையை சுட்டுக்கொலை செய்தது. இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த லோஹியா நகர் காவல் துறையினர், அர்ஷத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணை:
அவரை யார் கொலை செய்தனர்? எதற்காக இக்கொலை நடைபெற்றது? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. பலியான அர்ஷத் பல குற்றவழக்கில் தொடர்பில் இருப்பதால், நடப்பு இடத்தில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. இருதரப்பு கும்பல் மோதலில் கொலை நடந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
मेरठ - स्विमिंग पूल में घुसकर हमलावरों ने गोली मारी
➡स्विमिंग पूल में लाइव मर्डर की वारदात से हड़कंप
➡दो मासूम बच्चों के सामने पिता की जान ली
➡हत्या की पूरी वारदात सीसीटीवी में हुई कैद
➡हत्या की वजह पुरानी रंजिश बताई जा रही
➡हमलावर व्यक्ति की हत्याकर मौके से हुए फरार… pic.twitter.com/obkhQ4bpeY
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) June 5, 2024