Minor Girl Gave Birth: குழந்தை பெற்றெடுத்த 16 வயது சிறுமி; ஆசை வார்த்தை கூறி உறவினர் வெறிச்செயல்..!

வேலூரில் 16 வயது சிறுமியை அவரது உறவினர் ஒருவர் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து, தற்போது அவர் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Gave Birth: குழந்தை பெற்றெடுத்த 16 வயது சிறுமி; ஆசை வார்த்தை கூறி உறவினர் வெறிச்செயல்..!
Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

மே 28, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதுதொடர்பாக, மருத்துவர்கள் சமூக நலத்துறைக்கு (Department of Social Welfare) தகவல் அளித்துள்ளனர். மேலும், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். Cheating On Girlfriend: காதலியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!

இதனையடுத்து, குடியாத்தம் துணை காவலர் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில், அனைத்து மகளிர் காவல்துறையினர் உடன் சென்று அந்த சிறுமியிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியின் உறவினரான சாமிநாதன் என்பவர்தான், ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல்துறையினர் சாமிநாதன் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாமிநாதனுக்கு திருமணம் ஆகி முதல் இறந்துவிட்டார். முதல் மனைவி மூலமாக ஒரு பெண் குழந்தை உள்ளது. பின்னர், இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதில், 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவ்வாறு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 28, 2024 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).