Cheating On Girlfriend: காதலியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!

சேலத்தில் தனது காதலியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Cheating On Girlfriend: காதலியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!
Woman Rape (Photo Credit: Pixabay)

மே 28, சேலம் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே வளையமாதேவி எம்.பி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகன் பாரத் (வயது 25) என்பவரும், தலைவாசல் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் இருவேறுபட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். US Storms: அமெரிக்காவை புரட்டியெடுத்த சூறாவளி புயல்கள்; 23 பேர் பலி., இருளில் மூடிய 3 இலட்சம் வீடுகள்.!

இந்நிலையில், பாரத் தனது காதலியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அவருடன் தனிமையில் உல்லாசமாக (Rape) இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு, அவர் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான அவர், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பாரத் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on May 28, 2024 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).