Trichy Shocker: அம்மாவை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; நண்பருடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மகன்..! திருச்சியில் பகீர் சம்பவம்..!

திருச்சியில் தனது தாயை திருமணம் செய்து ஏமாற்றிய 24 வயது காதலனை, 17 வயது மகன் நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trichy Shocker: அம்மாவை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; நண்பருடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மகன்..! திருச்சியில் பகீர் சம்பவம்..!
Murder File pic (Photo Credit: Pixabay)

மே 11, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டம், இபி ரோட்டில் உள்ள கருவாட்டுப்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் பரணிகுமார் (வயது 24). கூலித்தொழிலாளியான இவர், எ.புதூர் ராமச்சந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஜோதி (வயது 45) என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே தகாத உறவாக மாறியது. இதனால், அடிக்கடி ஜோதி வீட்டிற்கு பரணிகுமார் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிங்காரத்தோப்பு பகுதியில் ஜோதியை சந்தித்து பரணிகுமார் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது, பரணிகுமார் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வெட்டிக்கொலை: இதனையடுத்து, ஜோதி தனது 17 வயது மகனிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர், தனது நண்பரான பீமநகர் முறுக்குகார தெருவை சேர்ந்த முகமது தவுபீக்கை (வயது 19) அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு இவர்கள் இருவரும் பரணிகுமாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியைக் கொண்டு பரணிகுமாரை சரமாரியாக (A Son Killed Mother's Lover) வெட்டியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். Husband Stabbed To Wife And Daughter: கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு; மனைவி, மகளுக்கு கத்திக்குத்து..!

காவல்துறையினர் விசாரணை: இதுகுறித்து, தகவலறிந்த வந்த கோட்டை காவல்துறையினர், பரணிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து உயிரிழந்த பரணிகுமாரின் சகோதரர் குணசேகரன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து ஜோதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், 'ஜோதியும், பரணிகுமாரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரணிகுமார், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால், ஜோதி தனது மகனை வரவழைத்து பரணிகுமாரை கொலை செய்துள்ளது' தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகன் மற்றும் தவுபீக்கை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on May 11, 2024 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).