Knife (Photo Credit: Pixabay)

மே 11, தருமபுரி (Dharmapuri News): தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அடுத்துள்ள கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே வசித்து வரும் தம்பதி தனசேகரன் - யாசினி. இவர்களுக்கு சாந்தினி மற்றும் ஷபானா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால், யாசினி வெளியில் சென்று நுங்கு வாங்கி வந்தார். அப்போது, எதற்கு இவ்வளவு நுங்கு வாங்கி வந்துள்ளாய் என்று அவரது கணவர் தனசேகரன் கேட்டுள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. Aurora in Iceland: காணக்கிடைக்காத அரோரா நிகழ்வு.. வானின் விந்தையில் மிகப்பெரிய வியக்கவைக்கும் நிகழ்வின் வீடியோ உள்ளே.!

இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென தனசேகரன் தனது மனைவியை கத்தியால் (Stabbing) குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற மகள் சாந்தினியையும் கத்தியால் குத்தினார். இதில், இவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி வந்துள்ள நிலையில், அருகில் உள்ள அக்கம்பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு படுகாயமடைந்த இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, தனசேகரனை பிடித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடன் ஒப்படைத்தனர். இவரை ஏ. பள்ளிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.