Pregnant Woman Suicide: கணவர் இறந்த துக்கத்தில், 4 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை..! உறவினர்கள் சோகம்..!
திருவண்ணாமலையில் கணவர் இறந்த இரண்டு நாளில், 4 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 01, திருவண்ணாமலை (Thiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், புதுச்சேரி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி (வயது 23) என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு சர்வேஷ் (வயது 1) என்ற மகன் உள்ளார். திவ்யபாரதி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். Ravindra Jadeja Retirement: கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ரோஹித், விராட்டை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி அஜித்குமார் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதன்காரணமாக திவ்யபாரதி கடந்த 2 நாட்களாக கணவரை பிரிந்த சோகத்தில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இதனையடுத்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யபாரதி தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். அப்போது, அங்கு சென்ற அவரது தாயார் பாக்கியலட்சுமி, இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த கலசபாக்கம் காவல்துறையினர் திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

