மார்ச் 04, புதுடெல்லி (New Delhi): விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் (ISRO) கனவுத் திட்டம் தான் ககன்யான் (Gaganyaan). இத்திட்டமானது 2025 ஆம் ஆண்டு நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளனர். அதன் சோதனை முயற்சியாக வியோமித்திரா (Vyommitra) என்ற பெண் ரோபோவை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இத்திட்டம் கீழ் 4 வீரர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. அந்த வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். Pat Cummins Replaces Aiden Markram: இரண்டு SAT20 கோப்பை வென்றவரை தூக்கி.. 2 உலகக்கோப்பை வென்றவரை கேப்டனாக நியமித்த சன்ரைசர்ஸ் அணி..!
இந்த 4 விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்லுவதற்கு முன்பாக, பாதுகாப்பு நலன் கருதி இஸ்ரோ 2 சோதனை ஓட்டங்களை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் சோதனை ஓட்டத்தின் போது, காலி விண்கலத்தையம், இரண்டாம் சோதனை ஓட்டத்தில் இஸ்ரோ வியோமித்திரா என்ற பெண் ரோபோவையும் விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. இந்த பெண் ரோபோட் வியோமித்திரா கடந்த 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விண்வெளி பயணத்தின் பொழுது வீரர்கள் கேட்கும் அணைத்து வகையான கேள்விகளுக்கும் இந்த ரோபோட் பதில் அளிக்கும். இஸ்ரோ உருவாக்கும் முதல் மனித உருவ ஹியூமனாய்டு ரோபோட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.