ஏப்ரல் 09, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாவட்டம், நல்லிக்கவுண்டன் நகரில் 7-வது தெருவில் வசித்து வரும் சந்திரசேகரன் (வயது 60) என்பவரது குடும்பத்தினர் 6 பேரும் ஒன்றாக அவர்களது மகிழுந்தில் திருக்கடையூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்ப வந்துகொண்டிருந்துள்ளனர். சந்திரசேகரனின் இளைய மகன் இளவரசன் (வயது 26) மகிழுந்தை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், வெள்ளக்கோவில் காங்கேயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மகிழுந்து (A Car Collided Government Bus) பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. Minor Girl Rape And Suicide: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி – விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை..!

இந்த விபத்தில், மகிழுந்தில் இருந்த சந்திரசேகரன் (வயது 60),இவருடைய மனைவி சித்ரா (வயது 57), இவர்களுடைய மூத்த மருமகள் அருவிவித்ரா (வயது 30), இவருடைய 3 மாத பெண் குழந்தை சாஷி மற்றும் மகிழுந்தை இயக்கி வந்த இளைய மகன் இளவரசன் (வயது 26) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதில், மூத்த மகன் சசிதரன் படுகாயமடைந்த நிலையில் இருந்துள்ளார், அவரை மீட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, அரசு பேருந்து ஓட்டுநரான கரூர் மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் (வயது 51) மற்றும் நடத்துனர் பழனிச்சாமி (வயது 53) ஆகியோர் மீது வெள்ளக்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.